கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 
rain school leave

கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

rain

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நேற்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.

Rain

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கூடலூர்,  பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.