#BREAKING பாஞ்சாகுளம் தீண்டாமை குற்றவாளிகள் 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை!!

 
tn

தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

tn

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டிலின பள்ளி மாணவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு என்று கூறி தின்பண்டம் வழங்க மறுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.  இதை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அத்துடன் இந்த தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்ற மூலம் தடை விதிப்பதற்கு தென்காசி மாவட்ட காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

tn

இந்நிலையில் பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் ஐந்து பேரும் ஆறு மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ஊர் கட்டுப்பாடு என கூறி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவத்தில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகியோர் ஆறு மாதம் ஊருக்குள் நுழைய நெல்லை சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.