கனமழையால் பழனி- கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு

 
சாலை

கனமழையால் பழனி- கொடைக்கானல் சாலை சேதம்பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லக்கூடிய பிரதான சாலையில் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 

பழனியை அடுத்த சபரிகாடு என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லக்கூடிய வாகனங்களும், கொடைக்கானலில் இருந்து பழனிக்கு வரக்கூடிய வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பழனி நெடுஞ்சாலைத்துறை  உதவி செய்ய பொறியாளர் ஜெயபால் தலைமையில்  ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மணல் மூட்டைகளை அடக்கி  சாலையை சீர் செய்யும் பணியை செய்துவருகின்றனர். ஓரிரு தினங்களில் பணியை முடித்து சுற்றுலா வாகனங்கள் பழனி வழியாக கொடைக்கானலுக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேதமடைந்துள்ள மலைச்சாலையை சீரமைக்கும் வரை கொடைக்கானல் சொல்லக்கூடிய வாகனங்கள் வத்தலகுண்டு சாலை வழியாக சென்று வர நெடுஞ்சாலை துறையினரும் போக்குவரத்து போலீசாரும் அறிகுறித்தியுள்ளனர்.