பத்ம விருதுகள் பெற்ற சாதனையாளர்கள் - தினகரன் வாழ்த்து

 
TTV

குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.  அந்த வகையில்  சமூகநீதிக்காக போராடிய மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

central

இதில் தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.  பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது ,  சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நாட்டின் உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி திருமதி.வாணி ஜெயராம், திரு.கல்யாணசுந்தரம் பிள்ளை, திரு.வடிவேல் கோபால், திரு.மாசி சடையன், திரு.பாலம் கல்யாண சுந்தரம், டாக்டர்.கோபாலஸ்வாமி வேலுசாமி மற்றும்..., புதுச்சேரியை சேர்ந்த டாக்டர். நளினி பார்த்தசாரதி ஆகியோரை பாராட்டி மகிழ்கிறேன். அவரவர் துறைகளில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து நம்முடைய தேசத்திற்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.