தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள்

 
வடிவேலு கோபால், மாசி சடையன்

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

Image

குடியரசு தின விழாவையொட்டி, 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இருவரும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்கள் ஆவர். உலகம் முழுவதும் சென்று அதிக விஷத்தன்மைமிக்க பாம்புகளைப் பிடித்தவர்கள். பாம்பு விஷ முறிவு மருந்துகளை கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸூக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைப்பாட்டுக்கு தீர்வு காணும் ஒ.ஆர்.எஸ். கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரியவர் மருத்துவர் திலீப். மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தெலங்கானாவை சேர்ந்த மொழியியல் பேராசிரியல் ராமகிருஷ்ண ரெட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது