69,000 வழக்குகளை முடித்து வைத்தவர் பி.என்.பிரகாஷ்.. - தலைமை வழக்கறிஞர் பாராட்டு..

 
நீதிபதிகள்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷுக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது.  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பணி ஓய்வு பெற்றார். கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த அவருக்கு நேற்று  பிரிவு உபசார வொழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், “கடந்த ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில் 69,000  வழக்குகளை முடித்து வைத்திருக்கும் நீதிபதி பிரகாஷ்  பணி ஓய்வு பெறுவதால், குற்றவியல் தொடர்பான வழக்கு விசாரணையில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதியை இப்போது இழக்கிறோம்” என்று கூறினார்.

பி.என்.பிரகாஷ்

அதன்பின்னர் பேசிய நீதிபதி பி.என்.பிரகாஷ், “துப்பாக்கியுடன்  செல்லும் உக்ரைனில் அல்லாமல், அதிபருடன் மோதிக்கொள்ள வேண்டிய பாகிஸ்தானில் அல்லாமல், மக்களால் பாதுகாக்கப்படும் சிறந்த அரசியலமைப்பு  சட்டத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவில் நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமைமிக்கது தெரிவித்தார்.   ஓய்வுக்கு பின், சிறை கைதிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிப்பது, ஏழை மாணவர்கள் தேர்வு தடைகளை தகர்த்தெறிய பயிற்றுவிப்பது போன்ற பணிகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.  நிதிபதி பிரகாஷ் பணி ஓய்வு பெருவதின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு  அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள்  பணியிடங்கள் 52 ஆக குறைகிறது.  காலியிடங்கள் எண்ணிக்கையும்  23 ஆக அதிகரித்துள்ளது.