ஜன.18ம் தேதி பா.ம.க. துணை அமைப்புகள் ஆய்வுக்கூட்டம் - அன்புமணி அறிவிப்பு

 
anbumani

பா.ம.க. துணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வருகிற 18-ம் தேதி தைலாபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசியல், சமூக, மொழி, கல்வி, கலை, கலாசார வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இதுவரை 34 அமைப்புகளை தொடங்கியிருக்கிறார். அந்த அமைப்புகள் அவை, அவை சார்ந்த தளங்களில் பணியாற்றி வருகின்றன. அந்தவகையில், டாக்டர் ராமதாஸ் தொடங்கிய 34 அமைப்புகளில் முதற்கட்டமாக 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, 18-ந்தேதி 10 மணிக்கு தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆய்வுக்கூட்டத்தில் பா.ம.க. சார்ந்த அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், தேர்தல் பணிக்குழு, கொள்கை விளக்க அணி மற்றும் அமைப்புப் பிரிவின் தலைவர்கள் ஆகியோர் இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு  கூறியுள்ளார்.