நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - அன்புமணி ராமதாஸ் உறுதி

 
anbumani

கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமைத்தாயகம் மற்றும சமூகத்தொண்டு அமைப்புகள் சார்பில் கோவையில், நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: 40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். ஆனால் தற்போது நொய்யல் ஆறு சீர்கெட்டு கிடக்கிறது. நொய்யல் ஆற்றை காப்பாற்றுவது என்பது அரசு தான் செய்ய வேண்டும். அரசை நாம் அனைவரும் இணைந்து செய்ய வைப்போம். நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும். 

நொய்யல் ஆற்றின் மூலம் 45 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயம் ஒரு காலகட்டத்தில் நடந்தது. ஆனால் இப்போது அதில் 35 சதவீதம் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இதனை நாம் 60, 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலப்பகுதிக்கு ஏற்ப பயிர்களை நாம் தேர்வு செய்து விவசாயத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். 'கொங்கு செழிக்கட்டும்', 'கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்' என்ற அந்த வாசகம் என்னால் மறக்க முடியாத ஒன்று. கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்

.