மாவீரன் பூலித்தேவரின் வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது - பிரதமர் மோடி

 
modi

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் வீரமும் உறுதியும் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

tn

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள  பாஜக தலைவர் அண்ணாமலை , சுதந்திரத்திற்காகப் போராடிய மாமன்னர் பூலித்தேவரின் பிறந்த தினமான இன்று அவரின் நினைவைப் போற்றிய நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு 
நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தமிழக பாஜக சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தந்தது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.