அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்!

 
modi

அண்ணா பல்கலைக் கழகத்தின்  42 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

New Education Policy Lays Foundation Of New India Of 21st Century: PM Modi

அண்ணா பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை, பிஎச்டி பட்டங்களை 2021 ம் ஆண்டில் முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் வெளிநாட்டிற்கு படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் சான்றிதழ்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் இருந்ததால்,தள்ளிப் போவதாக கூறப்பட்டது. அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா குறித்து உயர்கல்வித்துறை பொன்முடி கூறும்போது, தமிழ்நாடு ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கான அனுமதியை வழங்குவார் என கூறியிருந்தார். 

இந்த நிலையில்,சென்னையில் நடைபெறும் 44 வது செஸ் போட்டியை பிரதமர் மோடி 28 ந் தேதி துவக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து  மறுநாள் (29ந் தேதி) அண்ணா பல்கலைக் கழகத்தின் 42 வது பட்டமளிப்பு விழா விவேகானந்தர் அரங்கில் நடைபெறுகிறது. அந்த பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி  கலந்துக் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும்  வழங்க உள்ளார். இந்த  பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான பொன்முடி , துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்ள உள்ளளனர்.