சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி

 
modi

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வரவுள்ள நிலையில், சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டியை தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்தில் இருந்து தனி விமான மூலம் இன்று மாலை 4:45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.  ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் விமான தளத்திற்கு செல்லும் அவர்,  கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.  செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார். ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர் நாளை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.  பட்டப்படிப்பு விழா முடிந்த பிறகு சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் அங்கிருந்து அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.


இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, செஸ் விளையாட்டுடன் பெருமைமிகு தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.