நடிகர் விஷாலுக்கு பதில் அளித்த பிதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா?

 
Modi and vishal

காசி பயணம் தொடர்பாக நடிகர் விஷால் பிரதமர் மோடிக்கு நன்றி கூறியிருந்த நிலையில், அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். 

நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். பின்னர் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" இவ்வாறு பதிவிட்டு இருந்தார். இதனிடையே நடிகர் விஷால் பாஜகவில் சேரவுள்ளதாகவும், அதனாலயே பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளதாக்வும் பேசப்பட்டது. இந்நிலையில், இதற்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப் படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது என கூறியிருந்தார். 

இந்த நிலையில், நடிகர் விஷாலில் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அந்த பதிவை பகிர்ந்த பிரதமர் மோடி 'காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என பதிலளித்துள்ளார்.