மணியாச்சி வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

 
modi

மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்தார். 

பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதலே ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், மான் கி பாத் எனப்படும் மனதின் குரல் என்ற தலைப்பில் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதேபோல் ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர். 

modi

சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வேயின் வரலாற்றுப் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம். தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான், 25 வயதே ஆன வாஞ்சிநாதன், பிரிட்டிஷ் கலெக்டர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கினார்.  

காமல்வெல்த் போட்டியில் டீம் இந்தியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.