முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

 
modi stalin

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே 2 நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்த சூழலில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை , கண்காணிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வேண்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.