இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

 
mi

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது காந்திகிராம பல்கலைக்கழகம்.   பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதினை வழங்குகிறார்.  தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி , முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரும் இந்த விருது விழாவில் பங்கேற்கின்றார்கள்.

i

 திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராம பல்கலைக் கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.  2, 200 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது.  பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். 

 இந்த விருது விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி , முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.  பிரதமர் மோடி இந்த டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.