கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழா- காளை முட்டி சிறுவன் பலி

 
எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி! 

இந்நிலையில் நேற்று முன்தினம் வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற  எருது விடும் விழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அப்போது இந்த எருது விடும் விழாவை பார்வையிட சூளகிரி அருகே நாடுவனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பவன்குமார் (11 ) என்ற சிறுவன் வந்துள்ளான். அப்போது பி.மாதேப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழாவில் பங்கேற்று மாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென்று பார்வையாளர்களுக்குள் புகுந்த காளை ஒன்று பவன்குமார் மீது கழுத்து பகுதியில் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பவன் குமார் அப்பகுதியில் தூக்கி வீசப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பவன்குமரை குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பவன் குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.