நீரில் அடித்து செல்லப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாடுகள்

 
cow

ஆந்திர மாநிலம் நந்தியாலா  மாவட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகளை பன்றிகள் துரத்தியதால் நீர்தேக்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாடுகள் அடித்து சென்றன. 

cow

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள வேலுகோடு நீர்த்தேக்கம் அருகே உள்ள வனப்பகுதியில் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது காட்டு பன்றிகள் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை துரத்தி சென்றது. இதனால்  மாடுகள் அனைத்தும் வேலுகோடு நீர்த்தேக்கத்தில் இறங்கின.  இதில் நீர் தேக்கத்தில் நீரில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்த மீனவர்கள் படகுகள் மூலம் சென்று 350  மாடுகளை பத்திரமாக கரைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மேலும் 150 மாடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவற்றை மீட்க தீயணைப்பு துறையினருடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.