ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

 
ஆ

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆ

அந்நியன், தசாவதாரம், ஐ  உள்ளிட்ட படங்களை தயாரித்த  தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ்  ரவிச்சந்திரன் இரண்டு படங்களை தயாரிப்பதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்துள்ளார்.  அந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் 130 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார் ரவிச்சந்திரன்.   

அதன்பின்னரும் கூட வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாமல் மற்ற கடன்களை மட்டும்  செலுத்தி வந்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் .  இதன் பின்னர் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது .  இதை அடுத்து கடனுக்காக அடமானம் வைத்த அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது.   இதை எதிர்த்து கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.   இதில் இடைக்கால நிவாரணமும் பெற்றார்.

இந்த நிலையில்,   இறுதியாக கடந்த ஜூன் 24ஆம் தேதி அன்று ஏலம் குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.  அந்த மனுவில்,  கடன் பாக்கி  37.90 கோடி ரூபாயை ஒரே வணையில் செலுத்துவதாக கூறி இருந்தார்.  இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி,  நீதிபதி யார் மாலா ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது .

ஹ்

வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   மனுதாரருக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தும் அவர் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை.  அதனால் உயர் நீதிமன்றத்தை அவர் தவறாக பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார்.   இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,   ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சொல்லி,   ஆஸ்கார் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன் உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி வந்திருக்கிறார்.   ஆகவே அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.  மேலும்,  அந்த வழக்கை தள்ளுபடி செய்து உள்ளனர்.