ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு - எழுத்துபூர்வமான கோரிக்கை அளிக்க உத்தரவு

 
ration shop

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து எழுத்துபூர்வமான கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. 

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய, தமிழக அரசு குழு அமைத்தத். தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. இதில், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சீனியர், ஜூனியர் வித்தியாசமின்றி, சம்பள விகிதங்கள் இருப்பது, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ரேஷன் கடை ஊழியர்களில் தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்க, முரண்பாடு இல்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம், குழு அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

ration shop

 குழுவுக்கு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் தலைவராக நிமகிக்கப்பட்டிருந்தார். தர்மபுரி, கோவை, விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள், சென்னை கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் சரக துணை பதிவாளர்கள் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்  ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலித்து, வரும், 31ம் தேதிக்குள் பரிந்துரை அளிக்க இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து எழுத்துபூர்வமான கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. விரிவான எழுத்துப்பூர்வ கோரிக்கைகளை ஜூலை 14-க்குள் குழுவினரிடம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.