பொது காலாண்டு தேர்வு கிடையாது ; வரும் 30ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு!

 
dpi building

வரும் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வில் நடத்த நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  அத்துடன் இம்மாத 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

school

காலாண்டு தேர்வு பொருத்தவரை பள்ளி அளவில்  வினாத்தாள் தயாரித்து தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் புதிய நடைமுறையாக இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

school

அத்துடன் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே  முடிவு செய்து கொள்ளலாம் என்றும் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டு தேர்வு எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தனது அறிவிப்பில் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.