முருகன் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்திற்கு உத்தரவு

 
m

முருகன் மீதான வழக்கினை விரைந்து  விசாரித்து முடிக்க வேண்டும் என்று வேலூர் நீதிமன்றத்திற்கு  உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை  அனுபவித்து வருகிறார் முருகன்.   2020 ஆம் ஆண்டில் முருகன் தங்கி இருந்த அறையில் சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.    இதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததாகவும் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புகார் எழுந்தது.

h

இதனால் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் முருகன் மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை ரத்து செய்வதற்கு முருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் இன்று இந்த மனு மீது விசாரணை நடந்தது.   அப்போது,  இந்த வழக்கில் இதுவரைக்கும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று முருகன் தரப்பு வழக்கறிஞர் சொல்ல,  இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் இந்த வழக்கில் குற்றப்பதிரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  முருகன் மீதான வழக்கை வேலூர் நடுவர் நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.