ஆவின் ஆரஞ்சு பால் இனி லிட்டர் ரூ.60! 12 ரூபாய் விலை உயர்வு

 
aa

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்துள்ளது என்றும்,  இனி லிட்டர் 60ரூபாய் என்றும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வு வழங்குவதால் ஏற்படுகின்ற கூடுதல் செலவினத்தை ஈடு செய்வதற்காக இந்த விலை உயர்வு என்று ஆவின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.  அதே நேரம் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழக்கம் போல் 46 ரூபாய்க்கு ஆவின் ஆரஞ்சு பால் லிட்டர் விலை மாற்றம் இன்றி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

 இந்த விலை மாற்றம் நாளை நவம்பர் 5ஆம் தேதி முதல் கமலுக்கு வருகிறது.

aaa

 இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 3. 11. 2022 நாள் செய்தி குறிப்பினை தொடர்ந்து 5. 11 .2022 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 32 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும்,  எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 41 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவும் உயர்த்தி  வழங்கப்படும்.

 இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படுகின்ற கூடுதல் செலவினத்தை ஈடு செய்வதற்காக விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் விற்பனை விலையை பொருத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் -நீல நிறம் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால்- பச்சை நிறம் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி தற்போதைய நிலையே தொடரும் என்று தெரிவித்திருக்கிறது.

 தற்போது இருக்கும் நிறை கொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எந்த வித விலை மாற்றமும் இன்றி லிட்டர் ஒன்றுக்கு ஆறு ரூபாய்க்கு புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 60 ரூபாயாக 5. 11. 2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.  இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படுகின்ற கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்கின்ற வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டு இருக்கிறது.

 இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறை கொழுப்பு பால் அட்டை தனியார் பாலின் விலையை ஒப்பிடுகின்ற வகையில் 24 ரூபாய் குறைவுதான் என்றும்,  சில்லறை விலையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகின்ற போது பத்து ரூபாய் குறைவுதான் என்றும் ஆவின் நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது.