மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

 
Ops

சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் உட்பட தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ் | O.  Panneerselvam Calls on Edappadi Palaniswami to work together For the  Interest of ADMK | Tamil Nadu News in Tamil

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஒ.பி.எஸ்,  தனது இல்லத்தில், தனது தலைமையில் நியமிக்கப்பட்ட சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம்,ஜே.சி.டி பிரபாகரன்,பெரம்பலூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மறைந்த அதிமுகவின்  முன்னாள் பொது செயலாளர் ஜெயலலிதா வின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை சிறப்பாக அனுசரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

முன்னதாக விழுப்புரம்,கடலூர்,திருப்பத்தூர்,வாணியம்பாடி, கிருஷ்ணகிரி,அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை ஓபிஎஸ் சந்தித்தார் அப்போது அவர்கள் கொண்டு வந்த பூங்கொத்து மற்றும் சால்வையை பெற்றுக்கொண்டார்.