விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

 
BUS

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள்  சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது என்று   போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளது.

erode bus strike

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை என்பதால் பிற மாவட்டங்களில் தங்கி வேலை செய்பவர்கள் இன்று சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக நேற்று போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இன்று சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

Sivasankar

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச்சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திகொள்ளும்படியும் போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.