அதிமுகவின் சட்டபூர்வமான ஒருங்கிணைப்பாளர் நான் தான்! ஓபிஎஸ் அதிரடி

 
ops

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். 

OPS gains one more MLA, may meet Sasikala, TTV- The New Indian Express

அப்போது பேசிய அவர், “பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்து இருந்தேன். திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என வேலுமணி, தங்கமணி என்னிடம் பேசினர். அதனால் தான் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் எனக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. கூவத்தூரில் தான் சசிகலா முதல்வர் பதவி கொடுத்தார். ஆனால் அவருக்கும் நம்பிக்கை துரோகியாக இருந்தவர் தான் எடப்பாடி. நாமக்கலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி சொல்லி இருந்தார். யார் கூட்டணியில் இருப்பார்கள் என்று அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். 

விரைவில் மாவட்ட வாரியாக சென்று தொண்டர்களை நான் சந்திப்புது உறுதி. எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்பட்டு வருகிறோம். ஆளுநர் அவர் கடைமைய செய்து கொண்டு இருக்கிறார். ஆளுநர் மீது வைக்கப்டும் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. அதிமுகவின் சட்டபூர்வமான ஒருங்கிணைப்பாளர் நான் தான். திமுக கவனம் செலுத்தாத நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்து வருகிறேன். ஆளுநர் அவரது அதிகாரம் உட்பட்டு தான் செயல்படுகிறார். ஆளுநர் தேவையில்லை என்று சட்டத்தில் எதுவும் கூறவில்லை. ஆளுநர் அதிகாரத்தை மீறினார் என்று நிரூபிக்கவில்லை. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்து இருந்தேன். திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என வேலுமணி, தங்கமணி என்னிடம் பேசினர். அதனால் தான் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் எனக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை. அதிமுக அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் வைக்க பேசியபோது எதிர்த்தவர் தான் எடப்பாடி. நான் பேசிய பதிலுக்கு எடப்பாடி பேசினால் மீண்டும் பதில் கூற தயாராக இருக்கிறேன்” எனக் கூறினார்.