ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - ஓபிஎஸ் உறுதி

 
ops

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் 87 பேர், தலைமை கழக நிர்வாகிகள் 114 பேர் பங்கேற்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் பங்கேற்பு, ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அலோசிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்தா.ல் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும், விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றும். அதிமுக சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்.