தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது? ஓபிஎஸ் பதில்

 
ops

தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

OPS Vs EPS rift stands to hurt the AIADMK along caste lines | The News  Minute

தமிழக சட்டமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் தனது உரையை வாசித்தார், இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இரண்டாவது நாளாக சட்டமன்றம் கூடியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா  மற்றும் கால்பந்தாட்ட வீரர் பீலோ உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு  மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது

கூட்டம் முடிந்து வெளியே வந்த பேசிய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்,எதிர்க்கட்சித்துணைத்தலைவர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பேரவைத்தலைவரை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு  சட்டப்பேரவைத் தலைவரை நானும் சந்தித்தேன், இரங்கல் தீர்மானத்தின் மீது பேசுவது குறித்து பேசினேன், எதிர்க்கட்சி துணைத் தலைவர்  விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

வரும் 16ம் தேதி வெளிமாநில தொழிலாளர்கள் வாக்களிப்பது தொடர்பாக புதிய திட்டம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிற கூட்டத்தில் எங்கள்  சார்பாக யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து  விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.