மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்தது மகிழ்ச்சி- ஓபிஎஸ்

 
ops

பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக இருந்தது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Why leaders who stood by OPS earlier have deserted him | The News Minute

சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக இருந்தது. எங்கள் ஆதரவாளர்களுக்கு மனவருத்தம் இல்லை. மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசியது, என் அருகில் இருந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியும். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் மனவருத்தத்தில் இல்லை. மனமகிழ்ச்சியாக உள்ளனர்.


அரசு சார்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும்” என பேசினார்.