நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை- அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ்

 
Ops

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

Setback for OPS in home turf, HC sets aside brother's appointment as milk  coperative chief | Latest News India - Hindustan Times


இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஓபன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திரு.பேரறிவாளனை தொடர்ந்து, சுரேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி.


இதன்மூலம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அஇஅதிமுக இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.