அந்த 8 பேரும்தான் அடித்துக்கொன்றார்கள் -சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் ஸ்ரீதர் கடிதம்

 
ச்ர்

என்னைத்தவிர மற்ற 8 பேரும் தந்தை -மகனை  கொலை செய்தார்கள்  என்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் லாக்கப்பில் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

ஜ

 இந்த இரட்டை கொலை சம்பந்தமாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,  சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன்,  ரகுகணேஷ் , போலீசார் என்று 9பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் .  இரட்டை கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது .  இவ்வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 தந்தை , மகன் கொலை வழக்கில் தன்னை தவிர மற்ற எட்டு பேருமே கொலை செய்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம் எழுதியிருக்கிறார்.   

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ்,  பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரையும் தன்னைத்தவிர மீதி உள்ள  ஏ2 முதல் ஏ 9 வரை குற்றம் சாட்டப்பட்டவர்களே அடித்துக் கொன்றார்கள் என்றும்,    ஏன் அவர்களை சாகும் வரை அடித்துக் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு தன்னையும் மார்ச் 26ஆம் தேதி காலை 6.30மணிக்கு சிறையில் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருக்கிறார்.

 கொலை முயற்சி செய்த சம்பவம்  சிசிடிவியில்  பதிவாகி இருக்கிறது என்றும்,  இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.