அது ஆ.ராசாவுக்குத்தான் தெரியும் - வானதி சீனிவாசன் பதிலடி

 
b

அலைக்கற்றையில் ஊழல் எப்படி செய்யணும்னு ஆ.ராசாவுக்குத்தான் தெரியும். பாஜகவுக்கு  தெரியாது என்கிறார் வானதி சீனிவாசன்.

 2ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையானவர் திமுக எம்பி ஆ ராசா.  அவர் தற்போது 5ஜி அலைக்கற்ற ஏலம் தொடர்பாக குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.

வ்

 5ஜி அலைக்கற்றை  ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது.   5 ஜி  அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று மத்திய அரசு சொன்னது.  ஆனால் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போயிருக்கிறது.  எஞ்சிய பணம் எங்கே சென்றது? என்பது குறித்து மத்திய அரசுதான் பதில் அளிக்க வேண்டும்.  5 ஜி ஏலம் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை  முன்வைத்திருக்கிறார்.

இந்நிலையில்,  சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். வீடு தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பது குறித்து பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனையை மேற்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆ

 அப்போது 5ஜி அலைக்கற்றை தொடர்பாக ஆ.ராசா கூறி இருக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,   இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை நாட்டிற்கு தந்திருக்கிறது 5ஜி அலைக்கற்றை.   ஆனால் இது பற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்கு தான் இதில்  எப்படி ஊழல் செய்யலாம் என்பது தெரியும். பாஜகவுக்கு தெரியாது. அதனால தான் அவர் பேசுகிறார் . அது மட்டும் அல்லாமல் இந்த அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட இல்லாமல் எட்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது.  இலக்கை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம் . ஆனால் வெளிப்படை தன்மை உடன் ஏலம் நடந்திருக்கிறது.  தேவையில்லாமல் மத்திய அரசை குறை சொல்லக்கூடாது  நீங்கள் விலையை ஏற்றிவிட்டு மத்திய அரசை சொல்லக்கூடாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.