பழனி முருகன் கோவில் குடமுழுக்கு - 6,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

 
palani

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை காண 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற ஜனவரி 27ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,   குடமுழுக்கு விழா குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு இன்று கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் குடமுழுக்கு விழா காலை 8 முதல் 9.30 மணி வரை நடைபெறும் எனவும், பக்தர்கள் காலை 4 முதல் 8 மணிக்குள் மலைக் கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் பேரும், படிவழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குடமுழுக்கு விழாவை காண குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூவாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.