கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு 27ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..

 
Anbil Magesh

கனியாமூர் தனியார்  பள்ளி மாணவர்களுக்கு 27 முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் ,  கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி . இவர் கடந்த 13 ஆம்  தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  மாணவி 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.,  இந்த விவகாரம் குறித்து, கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது.  இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.  பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  

கள்ளக்குறிச்சி கலவரம்: 'போராட்டத்தில் மாணவியின் உறவினர் யாரும் இல்லை' -  வாட்ஸ் அப் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள்..

 மேசை நாற்காலிகள், மின்விசிறி, லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டன.  இதனால் பள்ளி மூடப்பட்டது.   இந்த வன்முறையால் அந்தப் பள்ளியில் பயின்று வந்த 4,500  மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அதன்பிறகு 10 நாட்களுக்கும் மேலாகியும்  அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படவில்லை.. அவர்களின் கல்வி எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலையடைந்தனர்.  அவர்கள் அனைவரும் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.  

கள்ளக்குறிச்சி பள்ளி

இந்நிலையில் இன்று  சக்தி பள்ளியை எப்போது திறப்பு என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் , கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் உடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் பள்ளியில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவர்களின்  நலன் கருதி பள்ளி திறப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக  தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு 27 முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.