ஒரே பயணச்சீட்டு - முதல்வர் இன்று ஆலோசனை

 
cm

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என்று அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது.   முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

ம்

ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.  சென்னை நந்தனத்தில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  

 இக்கூட்டத்தில்,  மோட்டார் அல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றன.   குறிப்பாக,  ஒரே பயணச்சீட்டில் சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்யும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.