கல்லூரி மாணவி கொலையில் ஒருதலை காதலன் விடுதலை

 
t

கல்லூரி மாணவி கொலை வழக்கில்  மாணவியின் ஒருதலை காதலன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் அடுத்த கருவேப்பலங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி.  19 வயதான இந்த இளம்பெண் விருத்தாசலம்  அருகே இருக்கும் தனியார் கல்லூரியில்  பி. ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  

 கல்லூரி முடிந்து வீட்டில் தனியாக இருந்த போது திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.   சம்பவம் குறித்து அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்ததில்,  கடலூர் மாவட்டம் பேரளையூரைச் சேர்ந்த ஆகாஷ் என்கிற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.  அவர்தான் திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்று கைது செய்யப்பட்டார் .

ய்

திலகவதியை ஒருதலையாக காதலித்து வந்தார் ஆகாஷ்.   திலகவதி காதலை ஏற்க மறுத்ததால் கத்தியால் குத்திய கொலை செய்துவிட்டார் என்று போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.   கடந்த 2019 ஆம் ஆண்டில் மே மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

 இது குறி இது குறித்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   ஆகாசின் தந்தை இந்த வழக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கில் திலகவதியின் பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து திலகவதியை கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.  

 இந்த வழக்கின் விசாரணை மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில்,   தற்போது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.   அந்த தீர்ப்பில்,  ஆகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனச் சொல்லி நீதிமன்றம் ஆகாசை விடுதலை செய்திருக்கிறது.