சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி - பலர் சிக்கியுள்ளதாக தகவல்

 
sivakasi

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர். அவ்வாறு பட்டாசு தொழில் நடைபெற்று வரும் ஆலைகளில், உராய்வு காரணமாக அவ்வபோது வெடி விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், திடீரென அந்த பட்டாசு ஆலையில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ரவி என்பவர் உயிரிழந்த நிலையில் பலர் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.