மஞ்சுவிரட்டில் காளைமுட்டி ஒருவர் பலி

 
death

மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில்  பார்வையாளர் ஒருவர்   உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Jallikattu

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று அலங்காநல்லூரில் நடைபெற்று வருகிறது.  கடந்த 15ஆம் தேதி அவனியாபுரம் , நேற்று பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  அத்துடன் அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.  அதேபோல இன்று காலை அலங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்று வருபவர்களுக்கு தங்க மோதிரம்,  தங்க காசு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கும் , காளையர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் காயம் ஏற்பட்டு வருகிறது

Death

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை  முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் கணேசன் என்ற 58 வயது நபர் பலியானார்.  மஞ்சுவிரட்டு போட்டியில் இதுவரை மொத்தமாக 25 பேர் காயமடைந்த நிலையில் 8  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 9 பேர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர் 9,  காளை உரிமையாளர் 13 , பார்வையாளர் 4 என மொத்தம் 26 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.