தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி

 
monkey pox

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு குரங்கமைத் தொற்றா? அவரது மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்து அனுப்பப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபர் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு வந்த நிலையில் அவருக்கு குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக கூறியதை தொடர்ந்து அவர் மாயமாகியுள்ளார். பின்னர் அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவரை இன்று மதியம் 2.30 மணிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரத்தம் சிறுநீர் தொண்டை மாதிரிகள் மற்றும் ஸ்கின் ஸ்கிராபிங் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவருக்கு குரங்கம்மை தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வுக்காக சென்னை அனுப்பப்பட்டுள்ளது ஆய்வு முடிவு வர ஒரு வார காலம் ஆகும் என்றும் இருப்பினும் அவரை பரிசோதனை செய்த தோல் நோய் மருத்துவர்கள் அவருக்கு குரங்கம்மை இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் இருப்பினும் முழுமையான சோதனை முடிவு வந்தால் மட்டுமே அது தெரியவரும் என்றும் அதுவரை அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி தகவல்.