தருமபுரி அருகே சூறைக்காற்று தூக்கி வீசியதில் ஒருவர் பலி

 
death

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம்  உள்ளிட்ட பகுதிகளில் பலமான சூறைக்காற்றும், லேசான மழையும் பெய்ததது. 

Class 10 student allegedly beaten to death by classmates at Jharkhand  school - India News

கோடிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜக்கம்பட்டி கிராமத்தில்  கடை ஒன்றின் முன்பிருந்த மேற் கூரை காற்றுக்கு தூக்கவே அதை சரிசெய்து கல் வைத்து அழுத்த கூரை மீது ஏறிய ஜெயவேல் (40) என்ற கட்டிட தொழலாளியை சூறைக்காற்று தூக்கி வீசியது. அதில் கீழே விழுந்து அவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் சாலையோரமாக இருந்த மூன்று மரங்கள் முறிந்து விழந்தது. அருகிலிருந்த ஜேசிபி உதவியுடன் சாலையிலிருந்த மரம் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு வழி செய்யப்பட்டது. இதே போல் பாப்பாரப்பட்டி சுற்றுப்பகுதயில் மழை குறைவு என்றாலும் பலமான சூறைக்காற்று வீசியது.

பனங்கள்ளி என்ற கிராமத்திலிருந்த பனைமரம் ஒன்றில் மின்னல் தாக்கி தீப் பற்றியது, மழை பெய்தாதல் தீ அணைந்தது. இதே கிராமத்தில்,கண்மணி, மணிவேல், என்பவர்களுடை வீட்டு சுவர் இடிந்து விழந்தது. நக்கல்பட்டி, எண்டப்பட்டி கிரமத்தில் மின் கம்பத்தில் முறிவு ஏற்பட்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது..