"திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 
mk stalin

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ttn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,548.04 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படவுள்ள நிகழ்வில். திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மட்டும் 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 78 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களை வழங்கினார். மேலும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

mk stalin
இந்நிலையில் திருச்சியில் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரும் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,  தமிழ்நாட்டின்  தொழில் துறை முன்னேற்றத்தை நோக்கி வேகமாக பயணிக்கிறது.  தொழில் முதலீடு செய்ய உலகின் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நோக்கி வருகின்றனர்.  உதயநிதி அமைச்சரவைக்கு தான்  புதிய முகம்; மக்களுக்கு பழைய முகம்தான். உதயநிதி ஸ்டாலின் வசம் எளிய மக்களை முன்னேற்றுவதற்கான துறைகள் உள்ளன.  மிகச்சிறந்த முறையில் பணியாற்றுவார் என நம்புகிறேன் . விமர்சனங்களுக்கு தன்னுடைய செயல்களால் பதில் தருபவர் உதயநிதி. தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள்  உருவாக்கப்படும். அதில் ஒன்று திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி  உருவாக்கப்படும் என்றார்.