மோடியுடன் ஓபிஎஸ் - புதிய நிர்வாகிகள் பரபரப்பு

 
om

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் இருக்கும் போஸ்டர்கள் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.

  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைக்க சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடி இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க இருக்கிறார்.   அப்போது இரவு 8:30 மணிக்கு மேல் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து உரையாட இருக்கிறார்.  

ka

 அதிமுகவின் கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை அவர்  தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார் என்று தகவல் பரவுகிறது . மோடியை சந்திப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல் பரவுகிறது.

 இந்த நிலையில் ஏட்டிக்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமி புதிய நிர்வாகிகளை நியமித்து வருவது போல் ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.  அப்படி காஞ்சிபுரத்தில் புதிதாக  ஓபிஎஸ் நியமனம் செய்தவர்கள் ஓபிஎஸ்க்கு  போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.   அதில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா படங்களும் பெரிய அளவில் இடம்பெற்று இருப்பதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.

  எடப்பாடி -ஓபிஎஸ் இருவரில் பாஜகவின் மேலிடத்து ஆதரவு ஓபிஎஸ்க்குத் தான் இருக்கிறது என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் இந்த போஸ்டர்கள் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன.