ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - கூட்டணி கட்சி தலைவர்களை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்

 
Ops

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணிக் கட்சி தலைவர்களை  ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார்.

ops

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், M.L.A. அவர்களின் தலைமையில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர். வைத்திலிங்கம், M.L.A., கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. கு.ப. கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்; திரு. J.C.D. பிரபாகர், Ex. M.L.A.; திரு. P.H. மனோஜ் பாண்டியன், M.L.A., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஜி.கே. வாசன், M.P., அவர்களை அவரது இல்லத்தில் இன்று (21-01-2023) காலை 11-00 மணியளவில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக சந்திக்க இருக்கின்றனர்.

ops

பின்னர், இன்று (21-01-2023) மாலை 4-00 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. K அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் சந்திக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. பெ. ஜான் பாண்டியன் அவர்களையும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் திரு. M. ஜெகன் மூர்த்தி, M.L.A. அவர்களையும் சந்திக்க இருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.