“முதல்வர் பதவி கிடைத்ததும் சசிகலாவை சிறைக்கு அனுப்பியவர் எடப்பாடி பழனிச்சாமி”

 
eps

நாமக்கல் லை அடுத்த விட்டமநாயக்கன்பட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (30-10-2021) நடைபெற்றது. இதில் சேந்தமங்கலம் சட்ட பேரவை தொகுதி முன்னாள் அதிமுக எம். எல்.ஏவும் சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இணைந்த சி.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார்.

nk_17_ex_mla_1710chn_122_8

அப்போது பேசிய அவர், “கடந்த 2016-ஆம் ஆண்டு மறைந்த முதலவர் ஜெயலலிதா அவர்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை உளவுத்துறை மூலம் தேர்வு செய்ததால் தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது. உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா நம்மிடமிருந்து பிரிந்து விட்டார். மறைந்த பிறகு ஆட்சிக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆட்சி பறிபோகின்ற நிலை ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சி 6 மாத காலங்களில் பறிபோகின்ற நிலை ஏற்பட்டது. தான் உட்பட அனைத்து எம்.எல்.ஏக்கள் எல்லாம் சேர்ந்து தான் ஒற்றுமையாக இருந்தோம்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் ஓ. பன்னீர் செல்வம். ஜெயலலிதாவுக்கு எப்போது எல்லாம் பிரச்சினைகள் வந்ததோ அப்போது ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவி வழங்கினார்.பின்னர் அந்த பதவியை அப்படியே ஜெயலலிதாவிடம் வழங்கியவர் ஓபிஎஸ். ஜெயலலிதா இருந்த சீட்ல ஓபிஎஸ் உட்கார்ந்ததே கிடையாது. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் 10 முறை ஓபிஎஸ் அவர்களை சந்தித்தனர். அப்போது ஒருங்கிணைப்பாளராக இருந்து கொள்ளுங்கள், நீங்கள் தான் முதல்வர் ஓபிஎஸ்-ஐ  ஏமாற்றி கையெழுத்து வாங்கியுள்ளனர். ஜெயலலிதா ஆட்சி இருக்க வேண்டும் என கையெழுத்து போட்டார். 11 எம் எல் ஏ க்கள் ஆதரவு வழங்கியதால் தான் பழனிச்சாமி ஆட்சி நீடித்தது. நன்றி மறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் இருக்கும் போது தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் தங்களை முதல்வராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தார்கள். அப்போது தான் தினகரன் அணிக்கு செல்வதாக கூறினார்கள். பணத்திற்கான போக மாட்டேன் என நான் நிரூபித்து காட்டினேன். வெற்றி வாய்ப்புள்ள தொகுதியான சேந்தமங்கலம் தொகுதிக்கு சரியான வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக ஆக கூடாது என தெளிவாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. ஓபிஎஸ், ஜெயலலிதா அவர்களால் 3 முறை முதல்வராக்கப்பட்டார். பின்னர் அந்த பதவியை ஜெயலலிதாவிற்கு கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகிய பின் சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பினார்” எனக் கூறினார்.