அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் ஓபிஎஸ் மகன்!

 
raa

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாளை பங்கேற்க போவதாக தெரிவித்திருக்கிறார்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத். 

 தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் அமைந்திருக்கும் சங்கரநாராயணர் கோவில் ஆடி தவசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் சென்றார் ஓபிஎஸ் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் .  

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் நிச்சயம் நான் பங்கேற்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ee

வாக்காளர் அடையாள அட்டையுடன்,  ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த,  நாளை  தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அதில்  அதிமுகவுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின்  தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

 அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் , இன்பத்துரை ஆகியோர் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதிமுகவில் ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என்று இரண்டு அணிகள் இருக்கும் நிலையில்  எடப்பாடி ஆதரவாளர்கள் இதை பெருமையாக சொல்லி வந்த நிலையில், 
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம்  அழைப்பு விடுத்திருக்கிறது. அதிமுக  சார்பில்  கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியிருந்த நிலையில்,  தான் கலந்து கொள்ளப்போவதாக சொல்லி இருக்கிறார் ஓ.ரவீந்திரநாத்.