எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு செல்வதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு

 
ep

எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்  உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுக அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதில் காவல்துறையினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அத்துடன் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது. இந்த விவாகரத்திற்கு பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் செல்லவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற அறிவித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார்.

op

இதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார். இந்நிலையில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று  அதிமுக அலுவலகத்திற்கு  வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள  மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.   

Pugazhendi

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என புகழேந்தி புகார் கொடுத்துள்ளார்

.