கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் ஓபிஎஸ்

 
ops

கொரோனா சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.

Why leaders who stood by OPS earlier have deserted him | The News Minute

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 1 வாரமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தொற்றின் பாதிப்பு குறைந்து சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து இன்று விடியற்காலை வீடு திரும்பியுள்ளார் 

ஓ.பி.எஸ். வீடு திரும்பியுள்ள அவரை மருத்துவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு பரிந்துரைத்து உள்ளனர். இதனால் ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓ.பி.எஸ்.-இன் வீடு தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.