எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்?

 
tn

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

eps ops

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாக மாறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் கட்சியின்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.  

ops
ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவி தற்போது திண்டுக்கல் சீனிவாசன் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் அவரிடம் அவரிடம் இருந்து பறிக்கப்படும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனிடையே சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ் , அதிமுக விவகாரத்தில் வழக்குகள் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்படும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.  எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் பரிசீலித்து  அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPS
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்சுக்கு பதிலாக  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு என கூறப்படுகிறது.