#BREAKING அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் - அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!!

 
ops

ஓபிஎஸ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Ops

அதிமுக ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கை  ஓங்கியது. இதனால் அதிமுக பொதுக்குழு நடத்தக்கூடாது,  அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால் பொதுக்குழு நடத்த தடை இல்லை என்று இன்று காலை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில்,  பொதுக்குழு திட்டமிட்டபடி  நடத்தப்பட்டது.  இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.இச்சூழலில் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என கே.பி. முனுசாமி தெரிவிக்த்தார். 

tn

இந்நிலையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்யப்படுவதாக  நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதிமுக கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓபிஎஸ்-ன் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிமுக அடிப்படை உறுப்பினர்,  பொருளாளர் பதவியில் இருந்து ஓ . பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.