ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி

 
ஒ

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாயாரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு தேனி செல்கிறார் பன்னீர்செல்வம்.

ஒம்

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் 90 வயதை கடந்த நிலையில் தேனி பெரிய குளத்தில் வசித்து வந்தார்.  இன்று பிற்பகலில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது .  இதை அடுத்து தேனியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பின்னர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 பல ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள்,  கடந்த வாரம் மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  அங்கு குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்.   இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சர்க்கரை அளவு , ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஓபிஎஸ் சகோதரர் ஓ. ராஜா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று பழனியம்மாளை கவனித்து வருகின்றனர்.  ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகளும் மருத்துவமனையில் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.