பெரிய குழப்பத்தில் உள்ளார் ஓபிஎஸ் - கே.பி.முனுசாமி விளாசல்

 
tn

ஓபிஎஸ் பெரிய குழப்பத்தில் உள்ளார் என்று கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட போவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், "சின்னத்தை மூடக்க காரணமாக இருக்கமாட்டேன். இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு காரணமாக இருக்கமாட்டேன்; அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஏற்கெனவே கூறியுள்ளேன்; சசிகலாவை சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் சந்திப்பேன். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டி. விதிகளின் படி அதிமுக கட்சி செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெல்லும் என்ற எழுதப்படாத விதியை மாற்றுவோம்.

kp munusamy

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஓபிஎஸ் அதிமுகவில் இல்லாதவர், அவருடைய அறிவிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெரிய குழப்பத்தில் உள்ள ஓபிஎஸ், அனைவரையும் குழப்பத்திற்கு ஆளாக்குகிறார் கட்சி நடவடிக்கை, நீதிமன்ற தீர்ப்பின் படி ஈபிஎஸ் தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது; எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு தான் சின்னம் கிடைக்கும் என்றார். 

jayakumar

அதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி விரக்தியின் வெளிப்பாடாக தெரிகிறது; திமுகவின் 'பி' அணியாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவது வேதனையானது கூட்டணி கட்சியினர் யாரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தரமாட்டார்கள்; ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவிப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று தெரிவித்தார்.